Sunday, February 8, 2015

கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது


 Posted By Muthukumar,On Feb 8,2014
* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.

ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள்


Posted By Muthukumar,On Feb 8,2015
காமம்: தனம், தான்யம், தாரம், தன் பிள்ளை, பேரன்கள் மீதுள்ள அளவிலா ஆசை 

குரோதம்: மற்றவருக்கு தீமை விளைவிக்க முற்படுவது. 

லோபம்: மற்றவருக்கு ஈயாதவனின் இயல்பு 

யோகம்: மனைவி மக்கள் மீது அதிக பாசம் வைத்து அதிக செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபடுவது. 

மதம்: மற்றவர்களை துச்சமாக நினைத்து கர்வத்துடன் செயல்படுவது. 

மாச்சர்யம்: மற்றவர் நன்கு வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல். 

டம்பம்: நான்கு பேர் மெச்சுவதற்காகவே நல்ல காரியம் செய்தல் 

தர்ப்பம்: செல்வம், செல்வாக்கு - இவற்றில் தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வம் கொள்ளல் 

ஈர்ஷை: தனக்கு நேர்ந்த கஷ்டமும், துக்கமும், பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைப்பது 

அசூயை: தீமை செய்வோருக்கு, பதிலுக்கு, தீமை செய்ய விரும்புவது. 

இந்த பத்து அழுக்குகளும், நீரை மூடியுள்ள பாசி போல, ஆத்மாவை மறைக்கின்றன.