Thursday, August 2, 2012

கர்பத்தை காக்கும் கர்ப்பரட்சாம்பிகை தாய்

Posted On Aug 2,2012,BY Muthukumar
இன்றைய காலங்களில் திருமணமாகி பல்வேறு காரணங்களால் குழந்தை பாக்கியமில்லாமல் பலரும் தவிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும்  வரபிரசாதமாக  உள்ளவர் தஞ்சை அருகே உள்ள திருக்கருக்கவூர் என்னும் இடத்தில குடிகொண்டிருக்கும் கர்ப்பரட்சாம்பிகை அல்லது முல்லைவனநாயகி என்னும் பார்வதிதேவி தன்னை நாடி வரும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அவர்களுடைய கர்பத்தை காத்து குழந்தை பேறு அளிகின்றார்.
இக்கோயிலுக்கு ஒருமுறை வந்து இவம்மனை மனதார வேண்டிக்கொண்டு வேண்டுதலை வைத்தால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என வேண்டுதல் நிறைவேறி குழந்தையுடன் வரும் தம்பதியரின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது.
இங்கு குழந்தை பாக்கியம் வேண்டிவரும் தம்பதியர் அன்னையின் சன்னதியில் நெய்யினால் படிமொழுகி கோலமிட்டு பிரார்த்தனை செய்துகொண்டு அம்பாளை வேண்டிக்கொண்டு தரப்படும் வெள்ளியினால் ஆன ஸ்கந்தர் உருவத்தினை தனது முந்தானையில் பெற்று தங்க தொட்டிலில் இட்டு கணவன் மனைவி இருவரும் அம்பாள் சன்னதியை ஒருமுறை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்   அம்பிகையின் திருப்பாதங்களில் வைத்து தரப்பட்ட அந்நெய்யினை வேண்டிக பெற்று கொண்டு 48 நாட்கள் அந்த நெய்யினை விரத முறைப்படி உண்டுவர நிச்சயம் பிள்ளை பாக்கியம் உண்டாகும்.
                                                           தங்க தொட்டில்
இவ்வாறு விரதமிருந்து பெற்ற குழந்தையை  பிரார்த்தனையின்படி
தம்பதியர் குழந்தையுடன் வந்து குழந்தையினை தங்க தொட்டிலில்
இட்டு தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றி கொள்ளவேண்டும்.சில தம்பதியினர் துலாபர வேண்டுதளையும் செய்து பிரார்த்தனையை நிறைவேற்றுகின்றனர்.
இக்கோவிலில் திருமணம் பாக்கியம் தடைபடுபவர்களுக்கு திருமண பாக்கியம் பெற அம்பிகை சன்னதியில் நெய்யினால் படிமொழுகி பிரார்த்தனை செய்துகொண்டால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும்.
இத்தலத்தில் செம்மேனிநாதனாகிய முல்லைவனநாதர் கங்கையாகவும்,
கருகாத்த  நாயகி யமுனையகவும், இரு ஆலயங்களுக்கு இடையில் குமார பரமேஸ்வரனாகிய சுப்ரமணியர் சரஸ்வதியாகவும் விளங்கி திருவேணி சங்கமத்தை ஒத்து சோமாஸ்கந்த சொருபமாய் விளங்குகிறார்கள்.எனவே மூவரையும் மூன்று முறை  வேண்டி வணங்கி வலம்வந்தால்    திருவேணிசங்கமத்தில் நீராடிய புண்ணியமும் காசியில் வழிபட்ட புண்ணியமும் ஏற்பட்டு திருமணம் கைகூடுதல்,மக்கட் பேறு மற்றும் சகல பேறுகளும் கிட்டும் எனவே இத்தலத்தை மும்முறை வலம் வந்து சகல பேறுகளையும் பெருக.

முல்லை வனநாதர் சன்னதி


இத்திருத்தலம் தஞ்சையிலிருந்து சுமார் 20 km தூரத்தில் உள்ள திருக்கருக்காவூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.இதற்கு பேருந்து வழித்தடங்கள் 16,34 & 44 .கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 km தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது இங்கிருந்து பேருந்து வழித்தடம் எண்: 11 & 29. இவ்இருஊரிலிருந்தும் திருக்கருக்காவூர் அடைய சுமார் ஒரு மணி நேரம் ஆகும்.


கோயில் கோபுரம்
 
தீர்த்த குளம்
 
 குழந்தை பேறு இன்றி தவிக்கும் அனைவருக்காகவும்     இப்பதிவினை தந்துள்ளேன்.முடிந்தவரை குழந்தை இல்லாது தவிக்கும் அனைவரிடமும் இத்தகவலை தெரிவிக்கலாமே.

Wednesday, August 1, 2012

ஆடிப்பெருக்கு பூஜை செய்யும் முறை

தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிக மாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் நிரம்பி காணப்படும். பயிர் செழிக்க வளம் அருளும் அன் னை காவிரிக்கு நன்றி தெரிவி க்கும் விதமாக, ஆடி 18-ல் பதி னெட்டாம் பெருக்கு விழா, நதிக் கரைகளிலும் ஆற்றங் கரைக ளிலும் கொண்டாடப்படுகி றது. தமிழ்நாட்டில் உள்ள காவிரி, பெண்ணை, பொருணை ஆகிய மூன்று நதிகளிலும் ஆடிப் பதி னெட்டு கொண்டாடுவதை, மூவாறு பதினெட்டு எனக் குறிப்பிடுவார்கள்.
வீட்டிலேயே செய்யலாம் ஆடிப்பெருக்கு பூஜை: காவிரிக் கரை யோரம் உள்ளவர்கள் மட்டுமே ஆடிப்பெருக்கைக் கொண்டாட வே ண்டும் என்ப தில்லை. ஆடிப்பெருக்கு பூஜையை நம் வீட்டிலும் எளிய முறையில் செய்யலாம். ஒரு செம்பில் அரைத்த மஞ்சளை சிறிதளவு போட வே ண்டும். நிறை குடத்திலிருந்து அந்த செம்பில் நீர் எடுத்ததும், மஞ்சள் கரைந்து விடு ம். திருவிளக்கேற்றி அந்த நீரை விளக்கின் முன் வைக்க வேண் டும். தண்ணீரில் உதிரிப் பூக்களை ப் போட வேண்டும். கற்பூர ஆரத்தி அல்லது நெய்தீபம் காட்டி கங்கை, யமுனை, நர்மதை, காவிரி, வைகை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்க ளை மனதில் நினைத்து, முன்னொரு காலத்தில் எங்களை மூதாதை யர் உங்களை புனிதமாகக் கருதி வழிபட்டதுபோல் எங்களுக்கும் அத்தகைய மனநிலையைத் தாருங்கள் என்று வேண்டுங்கள். காவி ரியையும் தாமிரபரணியையும் நமக்களித்த அகத்திய முனிவ ரை மனதார வணங்குங்கள். பூஜை முடிந்ததும் செம்பிலுள்ள நீரை செடி, கொடிகளில் ஊற்றி விட வே ண்டும். அன்று சர்க்கரைப் பொங் கல் நிவேதனம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் செல்வம் கொ ழிக்கும் என்பது நம்பிக்கை.
காவேரிக்கு பெருமாள் தரும் சீர்வரிசை: ஸ்ரீரங்கத்தில் அருள் பாலிக் கும் பெருமாள், ஆடிப்பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டப த்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தரு ள்வார். அங்கு அபிஷேக ஆராதனை கள் முடிந்ததும், அன்று மாலை புட வை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் முதலிய சீர் வரிசை களை யானையின் மேல் ஏற்றி ஸ்ரீ ரங்கம் கோயிலிருந்து அம்மா மண்ட பம் படித்துறைக்குக் கொண்டு வரு வார்கள். பெருமாள் முன் அந்தச் சீர் வரிசைகளை வைத்து ஆராதனை கள் செய்த பின் அவற்றை காவிரி க்கு சமர்ப்பிப்பார்கள். காவிரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் இக்காட்சியைக் கண்டால் கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
காவிரியில் ராமன்: ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, வசிஷ்ட முனிவரிடம் வழி கேட்டா ர். வசிஷ்டர், அறுபத்தாறு கோடி தீர்த்தங் களைத் தன்னிடம் கொண்ட காவிரிக்கு, தட்சிண கங்கை என்று பெயர். அந்நதி யில் நீராடினால் உன் பாவ உணர்வுகள் நீங்கும் என்று கூறினார். அதன்படி ராமச் சந்திரன் காவிரியில் நீராடிய நாள் ஆடி ப்பெருக்கு என்று ஒரு புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
மங்களச் சரடு: தென்னிந்தியாவில் திரி வேணி எனப்படும் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோயிலின் நடை ஆடிப் பதினெட்டு அன்று அதிகாலையில் திறக் கப்படும். மக்கள் கூடுதுறையில் நீராடி விட்டு இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய் வார்கள். பூஜை யில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக் கை.
ஆடிப்பெருக்கு வந்தாச்சு: தட் சிணாயன புண்ணிய காலம் என்று சூரியனின் தென் திசைப் பயணத்தைக் குறிப்பி டுவர். இதில் முதல் மாதமாக ஆடியில் விவசாயிகள் உழவு ப்பணிக ளைத் துவங்குவர். ஆடிப்பட்டம் தேடிவிதை என் று சொல் வதுண்டு. நாடு செழிக்கத் தேவையான நீரைப் போற்றிப் பாது காக்கவேண்டும் என்ற நோக்கத்தில் நதியைத் தெய்வமாகப் போற்றி வழிபட்டவர்கள் நம் முன்னோர். அதற்குரிய வழிபாட்டு நாளாக ஆடி பதினெட்டாம் நாளைத் தேர்ந்தெடுத்தனர். அன்று ஆடிப்பெருக்கு விழா கொண்டா டினர். இந்த விழா இப்போதும் காவிரிக்கரை மாவட்டங்களில் சிற ப்பாக நடக்கிறது. இந்நாளில் தொடங்கும் செயல்கள் இனிதே நிறை வேறும் என்பது ஐதீகம். ஆடி18ல் காவிரியில் நீராடி, காவிரி அன் னையை வழிபட்டு மஞ்சள், குங்கு மம், மலர், வஸ்திரம் சமர்ப்பிப்பர். புது மணத் தம்பதிகள் புதுமஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். ஆடிப் பெருக் கன்று, வீட்டில் கொடி வகைகளான அவரை, பீர்க்கு, புடலை போன்ற பயிர் க்குழி போடு வதும் உண்டு. நகை, பொருட்கள் வாங்கவும் நல்லநாள்.
நகை வாங்க நல்ல நாள்: அட்சய திரிதியையை விட, ஆடிப்பெருக்கு நன்னாள் நகை வாங்க உயர்ந்த நன்னாளாகக் கருதப்படுகிறது. இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். நாம் செய்கின்ற நற்செயல்களால், புண்ணியம் எப்படி பெருகுகிறதோ, அதுபோல் இந்நாளில் துவங்கு ம் சேமிப்பும் பல மடங்காய் பெருகு ம் என்பர். ஆடிமாதத்தில் பொதுவாக புதுத்தொழில் துவ ங்குவதில்லை என்பர். ஆனால், ஆடிப்பெருக்கு மட்டும் விதி விலக்கா கும்.
ரங்கநாதன் தங்கச்சி: காவிரிய ன்னை ரங்கநாதரின் தங்கையா கக் கருதப்படுகிறாள். இந்நாளி ல், சமயபுரம் பகுதியில் திருவிழா கோலமாக இருக்கும். இவ்வூரு க்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளையும், மைத்துனர்களையும் வீட்டிற்கு வரவழைத்து சீர் கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கி றது. தம்பதியரை இங்குள்ள ஆதிமாரியம்மன் கோயிலுக் கும் அழைத்துச் செல்வர். இவள் சமயபுரம் மாரியம்மனின் சகோதரி யாக கருதப்படுகிறாள். சாதாரண மக்களே, இவ்வாறு சீர்கொடுக்கு ம் போது, இங்கே கோயில் கொண்டிருக்கும் ரங்கநாதர் சும்மா இருப் பாரா! தன் தங்கை காவரிக்கு சீர் கொடுக்க அவர் அம்மாமண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.  அங்குள்ள மண்டபத்தில் சுவாமிக் கு திருமஞ்சனம் (அபிஷேகம்) நடக்கும். மாலை வரை அங்கேயே ஆஸ்தானத்தில் வீற்றிருப்பார். சீதனப்பொருட்களாக பட்டு, தாலிப் பொட்டு, மஞ்சள் உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் ஆற்றில் மிதக்க விடப்படும்.